விப்ரோவில் 600 பணியாளர்கள் அதிரடி நீக்கம்
பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனமான விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மத்திய்யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியபோது, ‘கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையான, அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் ஆகியவற்றை சீரான முறையில் விப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி வர்த்தக நோக்கங்கள், வாடிக்கையாளர்கள் தேவைகள் மற்றும் நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் ஆகியவற்றுடன் பணியாளர்களை வரைமுறைப்படுத்தி கொள்வதன் காரணமாக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில் பணியாளர்களை அனுப்புவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டியுள்ள நிலையில் ஐடி நிறுவனங்கள் உள்ளன.