கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை கொண்டிருக்கும் Nokia நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் வாங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் சில மாதங்களின் பின் தனது பெயரிலேயே கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தது. ஆனால் அடுத்த வருடம் Nokia நிறுவனம் மீண்டும் Nokia C1 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.இக் கைப்பேசியானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது Nokia கைப்பேசியாக திகழவுள்ளது.தற்போது இதன் புகைப்படங்கள் உட்பட சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM இனையும் உள்ளடக்கியுள்ளது.