பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு காதலர் செய்த உதவி

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு காதலர் செய்த உதவி

பிறவியிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண் ஒருவருக்கு அவருடைய காதலர் நிதியுதவி திரட்டி அறுவை சிகிச்சைக்கு உதவி மற்ற பெண்களை போல தனது காதலியை மாற்றியுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோடியில் ஒரு பெண் பிறவியிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறப்பதுண்டு. இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். இந்த நிலையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த காய்லே மோட்ஸ் என்ற பெண்ணுக்கு MRKH என்று கூறப்படும் பிறப்புறுப்பு இல்லா பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனை இவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்

இந்த நிலையில் மோட்ஸை கடந்த சில வருடங்களாக ராபி லிம்மர் என்பவர் காதலித்து வந்தார். முதலில் மோட்ஸ் அவரிடம் பழக தயங்கினாலும், பின்னர் மனதை பறிகொடுத்தார். பின்னர் ஒரு நாளில் தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்தும் காதலரிடம் மனம்விட்டு பேசினார். இதை பெரிதாக எடுத்து கொள்ளதாக ராபி லிம்மர், உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசித்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். $15000 அறுவை சிகிச்சைக்கு தேவை என்ற நிலையில் அந்த தொகையை அவரே திரட்டி தனது காதலியை மற்ற பெண்கள் போலவே இயல்பான பெண்ணாக்கினார். இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply