பெற்ற மகளை பட்டினி போட்ட ஜப்பான் தாய் கைது
ஜப்பான் நாட்டில் தாய் ஒருவர் தான் பெற்ற மகளை சரியாக உணவு கொடுக்காமல், பட்டினி போட்டு கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் கங்கவா என்ற மாகாணத்தை சேர்ந்த யூரி என்ற 25 வயது பெண் தனது காதலருடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில வருடங்களில் யூரி காதலனை பிரிந்து தனியே சென்றார்.
சில வருடங்களுக்கு பிறகு புனாட்டோ (33) என்ற வாலிபரை காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் தனக்கு பிரிந்த பெண் குழந்தையுடன் புனோட்டோ உடன் யூரி வாழத் தொடங்கினார்.
இந்நிலையில் குழந்தை யுவா மீது யூரிக்கு வெறுப்பு உண்டாக தொடங்கியது. அவரது கணவர் புனாட்டாவிற்கு குழந்தையை கண்டால் பிடிக்கவில்லை. இருவரும் சேர்ந்து யுவாவை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக குழந்தைக்கு தேவையான உணவை வழங்காமல் பட்டினி போட்டனர். இதனால் குழந்தை பசியால் துடித்தது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரில் குழந்தையின் தாய் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.