15 வருடங்களாக வளர்த்து வந்த 2மீ நீள தலைமுடியை ஏலம் விட முடிவு செய்த சீன பெண்.

 

 

longest hair 3சீனாவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் 15 வருட காலமாக வளர்த்து வந்த தனது நீண்ட தலைமுடியை ஏலம் விட முடிவு செய்துள்ளார். இவரது தலைமுடியின் நீளம் இரண்டு மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு சீனாவை சேர்ந்த சென்ஷென் என்ற நகரை சேர்ந்த 38 வயது Xiao என்ற பெண்ணுக்கு 2 மீட்டர் நீளத்திற்கு தலைமுடி உள்ளது. இவர் கடந்த 15 வருட காலமாக மூலிகைகள் மற்றும் இயற்கை முறையில் தயார் செய்த ஆயில்களை பயன்படுத்தி தன்னுடைய தலைமுடியை வளர்த்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி ஒரு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது நீண்ட தலைமுடியை வெட்டி ஏலம் விடப்போவதாகவும், அந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையை Ningxia என்ற நகரில் உள்ள தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏலம் நடத்தவுள்ள தினத்தை விரைவில் அறிவிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். அவருடைய தலைமுடியை ஏலம் எடுக்க பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  longest hair 4 longest hair 5 longest hair 6 longest hair 7 longest hair 8 longest hair 9 longest hair 10 longest hair 11 longest hair

Leave a Reply