கைகள் இன்றி விமானம் ஓட்டிய இளம்பெண்ணுக்கு கின்னஸ் சாதனை விருது

[carousel ids=”67700,67701,67702,67703,67704,67705,67706,67707,67708,67709,67710,67711,67712″]

தன்னம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் உடலில் முக்கிய உறுப்புகள் இல்லாவிட்டாலும் சாதனையை நிகழ்த்த முடியும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் நிரூபித்துள்ளார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெசிக்கா காக்ஸ் என்ற பெண்ணுக்கு தற்போது 32வயது ஆகின்றது,. இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை. ஆனால் இரண்டு கைகளுக்கு பதிலாக இரண்டாயிரம் கைகளுக்கு சமமான நம்பிக்கை இவரது மனதில் இருந்தது.

கைகள் இல்லாமல் பிறந்தாலும் இவர் தன்னுடைய தன்னம்பிகையால் ஜிம்னாஸ்டிக், நடனம், பியானா மற்றும் பலவகையான வாகனங்களை ஓட்டுவதிலும் பயிற்சி பெற்று அனைத்திலும் மேதையானார். இந்நிலையில் இவர் சமீபத்தில் விமானத்தை ஓட்டும் பயிற்சியும் பெற்று, பைலட் லைசென்ஸும் பெற்றுள்ளார். அமெரிக்காவிலேயே கைகள் இல்லாத ஒருவர் முதன்முதலில் பைலட் லைசென்ஸ் பெற்றது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைகள் இல்லாமல் விமானம் ஓட்டி சாதனை செய்த பெண் என்ற கின்னஸ் சாதனையும் இவருக்கு கிடைத்துள்ளது.

இவர் தன்னை விட இரண்டு வயது குறைவான பேட்ரிக் சாம்பர்லெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டலும், தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்து கொள்வார்.

மூன்று வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக்கும், ஐந்து வயதில் இருந்து நீச்சலும், ஆறு வயதில் இருந்து நடனமும், பத்து வயதில் இருந்து என்னுடைய வேலைகள் அனைத்தையும் நானே செய்து கொள்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் பேட்ரிக்கை சந்தித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டோம் என்று ஜெசிக்கா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply