[carousel ids=”65842,65843,65844,65845,65846,65847″]
அமெரிக்காவை சேர்ந்த விஸ்கான்சின் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆறுமாதங்களாக சேர்த்து வைத்த 110 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனை ஒன்றுக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன்மூலம் உலகிலேயே அதிகளவு தாய்ப்பால் தானம் கொடுத்தவர் இவர்தான் என்று கூறப்படுகிறது.
எமி போர்மான் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பால்குடித்தது போக மிக அதிகளவில் பால் சுரப்பதை கண்டறிந்த எமி, அதை சேமித்து வைக்க முடிவு செய்தார். தினமும் இரண்டு முதல் ஐந்து அவுன்ஸ் தாய்ப்பாலை சேகரித்து பிரிட்ஜில் சேமித்து வந்த அவர் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 110 லிட்டர் தாய்ப்பாலை சேர்த்ததாகவும், சேமித்து வைத்த தாய்ப்பால் முழுவதையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் என்பது எவ்வளவு முக்கியம் என்பது தனக்கு தெரியும் என்றும் எனவே தனது குழந்தைக்கு போக மீதமுள்ள தாய்ப்பாலை வீணாக்க விரும்பாமல் சேமித்து வைத்ததாக அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=SqYFxqvNfIA