பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியை வீடியோ எடுத்த ஒப்பந்தக்காரருக்கு கன்னத்தில் கிடைத்த அறை

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியை வீடியோ எடுத்த ஒப்பந்தக்காரருக்கு கன்னத்தில் கிடைத்த அறை

slapஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரியும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மன்தீப் கவுர். இவரிடம் சஞ்சய் குமார் என்ற வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர், தனது ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்தது சட்டவிரோதம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனால் கோபம் அடைந்த மந்தீப் கவு, ஒப்பந்தகாரர் சஞ்சய் குமாரை கன்னத்தில் பளார் என அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மன்தீப் கவுர் நேற்று தனது வாட்ஸ் அப் செய்தியில் கூறியிருப்பதாவது, “சஞ்சய் குமார் என்னிடம் வாக்கு வாதம் செய்ததற்காக அவரை நான் அறையவில்லை. என்னை வீடியோ படம் பிடிப்பதை நிறுத்துமாறு நான் கூறியதைக் கேட்காததால் அவரை அறைந்தேன். நான் பணியில் இருந்தாலும், என் அனுமதி இல்லாமல் என்னை படம்பிடிக்க யாருக்கும் உரிமையில்லை. இது எனது அடிப்படை உரிமை. இதற்காக நான் போராடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் குமார் கூறும்போது, “எனக்கு எதிராக ஆணையர் தவறான வார்த்தைகளை பேசினார். அதனால்தான் எனது மொபைல் கேமராவில் படம் பிடித்தேன். இதற்காக எனது போனை பறித்துக்கொண்டு பலர் முன்னிலையில் என்னை அறைந்தார்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply