செல்பி மோகத்தால் உயிரிழந்த 19 வயது இளம்பெண்

செல்பி மோகத்தால் உயிரிழந்த 19 வயது இளம்பெண்
selfie
கேமரா மொபைல் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் வெளிவந்த பின்னர் செல்பிமோகம் அதிகரித்துள்ளது. உயிரையே பணயம் வைத்து ஒருசிலர் செல்பி எடுப்பதால் சில சமயம் அதுவே ஆபத்தாகி உயிரை பலிவாங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

செல்பி மோகத்தால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தற்போது 19 வயது இளம் ஜப்பானிய பெண் ஒருவர் செல்பியால் பலியாகியுள்ளார்.

கடந்த 9ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஃபோஷன் ரோஜா கார்டனில் செல்பி எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண், அங்கு ரயில் ஒன்று வருவதை பார்த்தார். ரயில் அருகில் வரும்வரை காத்திருந்து ரயிலுடன் செல்பி எடுக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அவர் செல்பி எடுத்து முடிப்பதற்குள் ரயில் அவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

Leave a Reply