அமெரிக்கா: மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ரூ.7கோடி ஜாமீன் தொகை.
மாமியாரை மருமகள் கொடுமைப்படுத்துவதும் மருமகளை மாமியார் கொடுமைப்படுத்துவதும் இந்தியாவில் சாதாரண நிகழ்வாக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்ற பெண்களுக்கும் இதேநிலைதான் தொடர்கிறது. இதை மெய்ப்பிப்பதை போல் ஒரு சம்பவம் அமெரிக்காவில் ஒரு இந்திய குடும்பத்திற்கு நடந்துள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தஸ்நீம் என்ற 47வயது பெண் அவருடைய 73வயது மாமியாரை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 26-ம் தேதி மாலை மர்மமான முறையில் தஸ்நீம் மாமியார் அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும், பின்னர் நடத்தப்பட்ட பிரேத சோதனையில் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. தஸ்நீம் தவிர வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை என்பதால் அவர்தான் இந்த கொலை செய்தார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தஸ்நீம் இந்திய மதிப்பில் ரூ.7 கோடி ஜாமீன் பிணைத் தொகையாக கட்ட வேண்டுமென்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது