கல்லூரி மாணவரின் கையில் கிடைத்த பெண்ணின் தாலி:

 போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கையில் பெண்ணின் தாலிச்சங்கிலி கிடைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் சமயநல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது தரையில் தாலி ஒன்று இருந்ததை பார்த்து, உடனே அதனை அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து அந்த தாலிக்குரிய பெண்ணிடம் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்

இதனை அடுத்து அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண் தனது தாலியை தொலைந்து விட்டது குறித்து புகார் அளித்தார். அதனை அடுத்து கல்லூரி மாணவர் கொடுத்த தாலியை போலீசார் அந்த பெண்ணிடம் காட்டிய போது தன்னுடைய தாலி தான் அது என்பதை உறுதி செய்தார்

3 பவுன் தங்க செயினை பேராசை இன்றி காவல் நிலையத்திடம் ஒப்படைத்து அதை உரிய பெண்ணிடம் சேர்க்க கூறிய கல்லூரி மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதேபோல் தாலியை தொலைத்த பெண்ணுக்கு ஒரு சில மணி நேரத்தில் போலீசார் திருப்பி கொடுத்த அதிரடி நடவடிக்கையும் பாராட்டப்பட்டு வருகிறது

Leave a Reply