முதல் கணவர் பூனை மரணம். நாயை இரண்டாவது திருமணம் செய்யும் 41 வயது பெண்
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 41வயது பெண் ஒருவர் தனது கணவர் இறந்துவிட்டதன் காரணமாக விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவருடைய திருமணம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் என்ன பரபரப்பு என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு பதில் இதோ: அவருடைய முதல் கணவர் அவர் வளர்த்த பூனை. தற்போது திருமணம் செய்யவுள்ள இரண்டாவது கணவர் அவர் வளர்த்து வரும் நாய்.
நெதர்லாந்து நாட்டின் டோமினிக் லெஸ்பிரல் என்ற 41 வயது பெண், தான் வளர்த்து வந்த பூனையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அந்த பூனை சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக இறந்துவிட்டதால் தற்போது அவர் தான் வளர்த்து நாயை திருமணம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களே திருமணம் செய்து கொள்ளும்போது வளர்ப்பு பிராணிகளை ஏன் திருமணம் செய்யக்கூடாது. நான் வளர்க்கும் விலங்குகள் என் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருக்கின்றன. அவைகளை திருமணம் செய்தால் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது இந்த விலங்குகளிடம் இருந்து எனக்கு உண்மையான அன்பு கிடைக்கின்றது’ என்று கூறியுள்ளார்.
டோமினிக் லெஸ்பிரல் இந்த திருமணம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.