பதவியேற்ற முதல் நாளிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி. அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் உள்ல வெர்ஜினியா என்ற மாகாணத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பதவி ஏற்ற முதல் நாளிலேயே மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதான பெண் போலீஸ் அதிகாரியான ஆஷ்லே கெயிண்டான் என்பவர் வாஷிங்டன்னில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள லேக்ரிட்ஜ் நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த வீட்டிற்குள் நுழைந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் போலீஸ் ஆஷ்லே கெயிண்டான் உள்பட 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி ஆஷ்லே கெயிண்டான் பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் தனிப்பட்ட பகையே இந்த தாக்குதலுக்கான காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.