அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் காரை டிரைவிங் செய்துகொண்டிருந்தபோது தான் ஹேப்பி என்று தொடங்கும் பாடலை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அந்த பாடல் தனக்கு மிகவும் ஹேப்பியை கொடுத்ததாகவும், ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டார். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதில் என்ன ஆச்சரியம் என்று தானே நினைக்கின்றீர்கள். அவர் ஹேப்பி என்ற ஸ்டேட்டஸ் போட்ட மறுநிமிடம் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார் என்பதுதான் சோகச்செய்தி.
அமெரிக்காவில் North Carolina என்ற மாகாணத்தை சேர்ந்த 32 வயது Courtney Ann Sanford என்பவர் கடந்த வியாழக்கிழமை காரில் தன்னுடைய நண்பர்களை பார்க்க சென்று கொண்டிருந்தார். காரில் செல்லும்போது ஹெட்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே சென்ற அவர் “The Happy” என்று தொடங்கும் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்டுள்ளார். அந்த பாடல் அவரை மிகவும் கவர்ந்ததால் உடனடியாக தன்னுடைய மொபைலை எடுத்து “The happy song makes HAPPY’ என்று ஸ்டேட்டஸ் போட்டார்.
காரை ஓட்டிக்கொண்டே மொபைலில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டதால் எதிரே வந்த டிரக் ஒன்றை அவர் கவனிக்க தவறிவிட்டார். இதனால் டிரக் மோதி பயங்கரமாக அவர் சென்று கொண்டிருந்த கார் மோதியது. Courtney Ann Sanford சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
அவர் ஃபேஸ்புக்கில் காலை 8.34 மணிக்கு ஸ்டேட்டஸ் போட்டார். விபத்து நடந்ததாக போலீஸாருக்கு போன் மூலம் தகவல் வந்த நேரம் 8.34. எனவே ஸ்டேட்டஸ் போட்ட மறுநிமிடம் அவர் மரணம் அடைந்திருக்கிறார் என்பது விசாரணையில் உறுதியாகியது.