சீனாவில் உள்ள ஒரு பெண் தனது ஹேண்ட்பேக்கில் ஒன்பது மாத குழந்தையை எடுத்து சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆன்லைனில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 26 வயது ஷூயூ ஹுயூஸ் என்ற பெண் தனது ஒன்பது மாத கைக்குழந்தையை தனது ஹேண்ட்பேக்கில் போட்டு அதை கையில் பிடித்துக்கொண்டு நடந்து சென்றார். இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர் அதை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார். குழந்தையை ஒரு பொருளை போல ஹேண்ட்பேக்கில் எடுத்து சென்ற பெண்ணுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் ‘தன்னுடைய மகன் ஹேண்ட்பேக்கில் இருப்பதைதான் மிகவும் விரும்புவதாகவும், ஹேண்ட்பேக்கில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவதில் அவனுக்கு பெரும் சந்தோஷம் என்பதால் அவ்வாறு செய்ததாகவும், குழந்தையை எப்படி அன்புடன் வளர்க்க வேண்டும் என்பது தனக்கு நன்றாக தெரியும் என்றும் அதுகுறித்து தனக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.