ஹைஹீல்ஸ் செருப்பால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து
மெக்சிகோ நாட்டில் உள்ள சோனாரா மாகாணம் நோகாலஸ் என்ற நகரில் மினர்வா என்ற இளம்பெண் பரபரப்பான சாலை ஒன்றை கடந்து செல்ல முயன்றபோது திடீரென சாலையில் சறுக்கி விழுந்ததால் அவர் மீது வாகனம் ஏறி படுகாயம் அடைந்தார். அவர் அணிந்திருந்த ஹைஹீல்ஸ் செருப்புதான் அவர் சறுக்கிவிழ காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மினர்வா அணிந்திருந்த “ஹை ஹீல்ஸ்” செருப்பு சறுக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. விதிகளை மீறி கடக்க முயன்ற அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.