கிறிஸ்துவ மக்களின் பெரும் மரியாதைக்குரியவராக கருதப்படும் போப்பாண்டவரை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பதுண்டு. அவ்வாறு போப்பாண்டவரை பார்க்க வரிசையில் நின்ற ஒரு இளம்பெண்ணை, பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்காததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் அனுமதிக்கப்படாததற்கு அவர் பிரா அணியாததே காரணம் என தெரியவந்துள்ளது.
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த விக்டோரியா என்ற இளம்பெண், கடந்த சில நாட்களுக்கு முன்னர் போப்பாண்டவரை பார்க்க வரிசையில் நின்றார். வெள்ளை நிற பனியனை மட்டும் அணிந்து மிகவும் கவர்ச்சியாக இருந்த அவரை பாதுகாப்பு காவலர்கள் வரிசையில் இருந்து வெளியேற்றினர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் ஆபாசமாக உடையணிந்திருந்தார் என்பதுதான். இதற்கு பதில் கூறிய விக்டோரியா தான் பிரா அணிய மறந்துவிட்டதாகவும், தன்னை போப்பாண்டவரை பார்க்க அனுமதிக்கும்படி அவர் கூறியும் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதே பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடும் விமானம் ஒன்றில் விமான பைலட்டுக்களின் காக்பிட் அறைக்குள் கவர்ச்சி உடையுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.