இங்கிலாந்து பிரதமரின் அடுத்த அதிரடி. பெண்கள் பர்தா அணிய தடை
இங்கிலாந்தில் வாழும் ஆங்கிலம் தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என சமீபத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பெண்கள் ஒருசில இடங்களில் பர்தா அணிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் முஸ்லீம் பெண்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் கேமரூன் வானொலியில் பேசியபோது, “பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் சோதனை சாவடிகளில் அடையாளம் கண்டுபிடிக்கவும், பள்ளிகளில் சீருடை கலாசாரத்தை பின்பற்றவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்கள் மேற்காசிய நாடுகளான ஈராக், சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதை தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிரான்ஸ் நாட்டைப் போன்று பர்தா அணிய முழுமையாக தடை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.