ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பரிதாப மரணம்
ஆதார் அட்டை என்பது இந்தியாவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு அரசு சலுகைகளை பெற ஆதார் அட்டை அவசியம் என்றாலும், ஆதார் இல்லாததாவர்களுக்கு பல பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டை இல்லாததால் பெண் ஒருவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு அதனால் அந்த பெண் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது
அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்தவர் லட்சுமண தாஸ். ராணுவ வீரரான இவர் கார்கில் போரில் உயிரிழந்தார். இவரது மனைவி சகுந்தலா கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து அவரது மகன் பவன் குமார், சகுந்தலாவை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனை நிர்வாகிகள் சசிகலாவை அனுமதிக்க ஆதார் அட்டை கேட்டுள்ளனர்.
பவன்குமாரும் தனது போனில் இருந்த தாயின் ஆதார் அட்டை புகைப்படத்தை காட்டியுள்ளார். ஆனால், ஆதார் எண் சரியாக தெரியவில்லை எனக் கூறி, அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.
இதனால் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.