சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதை கடுமையாக எதிர்த்தார். பையன்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அதற்காக தூக்கு தண்டனை விதிப்பது சரியல்ல என்று பேசினார். இந்த பேச்சுக்கு நேற்று நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் வந்தன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று, சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டி ஒன்றில், “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் தண்டனைக்குரியவரே. அவருக்கும் தூக்குதண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முஸ்லீம் மதக்கொள்கைப்படி, ஒரு பெண் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டால் அவர் தண்டனைக்குரியவரே. இந்தியாவில் தவறு செய்யும் பெண்கள் தப்பித்துவிடுகின்றனர். ஆண்கள் மட்டுமே தண்டனை பெறுகின்றனர்.
முலாயசிங் பேசிய பேச்சுக்கே கண்டங்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில் அவருடைய கட்சியை சேர்ந்த இன்னொரு தலைவர் பேசிய பேச்சினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.