பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க முடியாது: முதல்வர் திட்டவட்டம்

பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க முடியாது: முதல்வர் திட்டவட்டம்

பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை மத்திய அரசு மற்றும் ஒரு சில மாநிலங்களிலும் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்க முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மத்திய அரசு உயர்த்தியதால் குறைத்துள்ளது என்றும் ஆனால் மாநில அரசுகள் வாட் வரியை உயர்த்த இல்லை என்றும் அதனால் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்

மேலும் பெட்ரோல் டீசலுக்கான வரி குறைப்பு என்பது ஒரு கண்துடைப்பு என்றும் சிலிண்டருக்கான மானியம் என்பது ஒரு பொய்யான தகவல் என்றும் அவர் கூறியுள்ளார்