வொர்க் ஃபிரம் ஹோம்? அல்லது ஆபாச வொர்க்?

சைபர் பாதுகாப்பு நிறுவனம் வேதனை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை கடைபிடித்து வருகின்றன.

இந்த நிலையில் உலகம் முழுவதிலும் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் தங்களது கம்ப்யூட்டரில் அவ்வப்போது ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்த ஆய்வு ஒன்றில் 18% பேர் அலுவலக லாப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் பார்பதாகவும், 33% பேர் சொந்த லாப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாகவும் இதனால் ஊழியர்களுக்கு பணி மீதான கவனம் சிதறுவதால் அலுவலக வேலைகள் முடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதுமட்டுமின்றி இது மேலும் தொடர்ந்தால் அலுவலக கலாச்சாரத்தையே பாழ்படுத்தும் எனவும் அந்த ஆய்வாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply