தைரியமாக செயல்படுங்கள். பிரச்சனை வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். தலைமைச்செயலகத்தில் மோடி அதிரடி.

modi secretariet பிரதமர் பதவியேற்ற பின்னர் நேற்று முதல்முறையாக தலைமைச்செயலக முக்கிய அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் நேற்று பேசிய மோடி, “நேர்மையான, ஊழலற்ற அரசு அமைய, தைரியமாக நேர்மையாக செயல்படுங்கள். உங்கள் நேர்மைக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உங்களை காப்பாற்ற முதல் ஆளாக நான் வருவேன்”: என்று அதிரடியாக பேசியதால், அதிகாரிகள் அவரது பேச்சை கைதட்டி வரவேற்றனர்.

நேற்று டெல்லி தலைமைச்செயலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த 72 செயலக அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் மோடி கலந்துகொண்டார். கடந்த எட்டு ஆண்டுகளில் தலைமைச்செயலகத்தின் கூட்டத்தில் பேசும் முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 2006ஆம் ஆண்டு தலைமைச்செயலக அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

modi secretariet 1அந்தந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நேர்மையாகவும், தைரியமாகவும் செயல்படுமாறும், அவர்களுக்கு எந்த இடையூறு வந்தாலும் தன்னை வந்து தைரியமாக சந்தித்து தேவையான உதவிகளை பெறலாம் என்றும், தனக்கு தேவை ஊழலற்ற, நேர்மையான அரசுதான் என்றும், பேசிய அவர், அதிகாரிகளை மிரட்டுவது யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பிரதமர் மோடியின் பேச்சு தலைமைச்செயலக அதிகாரிகளுக்கு புத்துணர்ச்சியை கொடுத்ததாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply