உலகின் மிகச்சிறந்த நகரம் வியன்னா. மோசமான நகரம் டாக்கா.

சர்வதேச அளவில் மிகச்சிறந்த நகரம் குறித்த ஆய்வு குறித்து Mercer consulting group என்ற நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை சமீபத்தில் எடுத்தது. இதன் முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, உலகின் மிகச்சிறந்த நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வியன்னாவை அடுத்து ஜுரிச், ஆக்லாந்து, முனீச், வான்கூவர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 27வது இடத்தில் உள்ளது.

ஆசிய அளவில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், உலக அளவில் அந்த நகரம் 25வது நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள்து. இந்த வரிசையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply