உலக பணக்காரர்கள் பட்டியல்: 17 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் பில்கேட்ஸ்

உலக பணக்காரர்கள் பட்டியல்: 17 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் பில்கேட்ஸ்
Bill-Gates
பிரபல ஆங்கில இதழான போபர்ஸ் உலகின் மிக சக்தி மிக்கவர்கள், பணக்காரர்கள், சாதனை புரிந்தவர்களின் பட்டியல்களை அவ்வப்போது தயாரித்து வருகிறது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளார். இவர் தொடர்ந்து 17 முறை முதலிடத்தில் உள்ளதாகவும், இவரை மிஞ்ச கடந்த 17 வருடத்தில் இன்னும் யாரும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலிலுக்காக 1810 பேர் உலகம் முழுவதிலும் இருந்து கணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 16 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ள பில்கேட்ஸ் இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு $4.2 பில்லியன் டாலர் குறைவுதான் என்றாலும் இன்னும் இவர்தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸை அடுத்து ஸ்பானிஷ் தொழிலதிபர் அமன்சியோ ஒர்டிகா இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 36வது இடத்திலும், தமிழரான HCL நிறுவனர் ஷிவ்நாடார் 88வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானி 453 வது இடத்திலும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி 959 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் மொத்தம் 84 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply