உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. நியூசிலாந்து அணி அபார வெற்றி. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

cricket 1உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதி நியூசிலாந்து போட்டியில் அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது. பின்னர் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

298 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கிய விரட்டிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 299  ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 59 ரன்களும், குப்தில் 34 ரன்களும், ஆண்டர்சன் 58 ரன்களும், டெய்லர் 30 ரன்களூம், எலியாட் 84  ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றது.

Leave a Reply