உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் அர்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று அதிகாலை பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் 3வது இடத்தை பிடிக்க பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையாவது பிடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் என எதிர்பார்த்த வேளையில் இந்த போட்டியிலும் படுதோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்கள் பிரேசில் வீரர்கள்.
அரையிறுதியில் அசிங்கமான தோல்வியை பெற்றா பிரேசில் அணி, இந்த போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 0-3 என்ற கோல்கணக்கில் மீண்டும் படுதோல்வி அடைந்ததால் உள்ளூர் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
முதல் பாதியில் எவ்வித நெருக்கடியும் இன்றி இரண்டு கோல்களை போட்ட நெதர்லாந்து வீரர்கள் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் போட்டு மிக எளிய வெற்றியை பெற்றனர். பிரேசில் அணி கடைசிவரை ஒரு கோல்கூட போடமுடியாமல் ஏமாற்றமடைந்தது.
நெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். 3 வது இடம் பிடித்த நெதர்லாந்து அணிவீரர்களுக்கு நேற்று வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.