உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதியில் ஜெர்மனி அபார வெற்றி. பிரேசில் பரிதாப தோல்வி

[carousel ids=”37032,37033,37034,37035,37036,37037,37038,37039,37040,37041,37042,37043,37044,37045,37046″]

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முக்கிய போட்டியானஅரையிறுதி போட்டியில் இன்று அதிகாலை நடந்தது. இந்த போட்டியில் பிரேசில்,ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சொந்த நாட்டில் விளையாடும் பிரேசில் அணி 1-7 என்ற கோல்கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. மிக அபாரமாக விளையாடிய ஜெர்மனி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆட்டம் துவங்கியதில் இருந்தே பந்து ஜெர்மனி வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிக நேரம் இருந்தது. பிரேசில் அணியினர் துவக்கத்தில் இருந்தே திணற ஆரம்பித்தனர். ஆட்டத்தின் 11 வது நிமிடத்தில் பிரேசிலுக்கு எதிராக முதல் கோலை அடித்து ஜெர்மனி உற்சாகம் அடைந்தது. பின்னர் ஜெர்மனி வீரர்கள் ஆட்டத்தின் 22வது நிமிடம், 22வது நிமிடம், 26வது நிமிடம், 29வது நிமிடம் என்று அடுத்தடுத்து கோல் போட்டு பிரேசில் அணியை திணறடித்தனர். மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பிரேசில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சியையும் பார்க்க முடிந்தது.

முதல் பாதியில் 5-0 என்று இருந்த ஜெர்மனி அணி இரண்டாவது பாதியிலும் கலக்கலாக விளையாடியது. ஆட்டத்தில் 69வது மற்றும் 79வது நிமிடங்களில் இரண்டு கோல் போட்டு வெற்றியை உறுதி செய்தது. கடைசி நேரத்தில் பிரேசில் ஒரே ஒரு கோல் போட்டு தனது ஆறுதலை தேடிக்கொண்டது. இறுதியில் ஜெர்மனி அணி 7-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஜெர்மனியின் க்ரூஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply