நவம்பர் 3 முதல் உலகக்கோப்பை கபடி போட்டி ஆரம்பம்.
ஒவ்வொரு ஆண்டும் உலகக்கோப்பை கபடிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் 6-வது உலக கோப்பை கபடி போட்டி வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் 14 இடங்களில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடியும், பெண்கள் பிரிவில் வாகை சூடும் அணிக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இதுவரை அனைத்து சாம்பியன் பட்டங்களையும் இந்திய அணியே கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.