டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்.
கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் 6-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களான நாக்பூர், கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், பெங்களூரு, தர்மசாலா, மொஹாலி ஆகிய 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் 27 நாட்களில் 35 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக `சூப்பர் 10′ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதியுள்ள 8 அணிகளில் தகுதி அடிப்படையில் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும்.
மார்ச் 15ஆம் தேதி முதல் சூப்பர் 10 சுற்று தொடங்குகிறது. ஏப்ரல் 3ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.37 கோடி ஆகும். இந்த தொகை கடந்த ஆண்டைவிட 84 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது..
இன்றைய முதல் ஆட்டத்தில் ஹாங்காங்-ஜிம்பாவே அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.