உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி

Rohit Sharma, Luke Ronchiஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 10 ஆட்டம் நாக்பூர் மைதானத்தில் செவ்வாய் இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் அவுட் ஆனார். பின்னர் 3வது ஓவரில் ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்நததால் 3வது ஓவர் முடிவில் 12 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இந்தியா இருந்தது.

பின்னர் விளையாடிய யுவராஜ்சிங் 4 ரன்களிலும், பாண்ட்யா ஒரு ரன்னிலும், ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் அஸ்வின் 10 ரன்களிலும் தொடர்ந்து அவுட் ஆனார்கள். விராத்கோஹ்லி 23 ரன்களும், கேப்டன் தோனி 30 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளது. நாளை கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியுடன் மோதுகிறாது.

Leave a Reply