உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வெளியேற்றம்
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
நேற்று மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
நேற்று நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பீல்டிங் செய்ததால் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.