உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது மேற்கிந்திய தீவு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு ஓவர்களில் எட்டு ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து இங்கிலாந்து அணி தத்தளித்து கொண்டிருந்த நிலையில் ரூட் ஓரளவுக்கு நிலைத்து நின்று விளையாடி 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் இரண்டே பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 161 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. சாமுவேல் மிக அபாரமாக விளையாடி 85 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருது இந்தியாவின் விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.