இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் நிலை என்ன? கருத்துக்கணிப்பின் முடிவு

இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் நிலை என்ன? கருத்துக்கணிப்பின் முடிவு

pressஉலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஊடக சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்ற ஒரு கருத்துக்கணிப்பை பின்லாந்து நிறுவனம் ஒன்று அதன் முடிவை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகளை கணக்கில் கொண்ட இந்த கருத்துக்கணிப்பில் இந்தியா 133வது இடத்தில் பரிதாபமாக பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்து நாட்டில் உள்ள Reporters Without Borders (RSF) என்னும் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், உலக நாடுகளில் ஊடகங்களின் சுதந்திரத்தன்மை பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்து வெளியிட்டு வருகிறது. இதன்படி ஊடக சுதந்திர விஷயத்தில் பின்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளது. இந்நாடு தொடர்ந்து 6வது ஆண்டாக முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்தை அடுத்து இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து நாடும் மூன்றாவது இடத்தில் நார்வே நாடும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஊடகவியலாளர்கள், மற்றும் வலைத்தள பதிவாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காஷ்மீர் போன்ற சில பகுதிகளில் ஊடகங்களால் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பிடித்த சில முக்கிய நாடுகள்:

அமெரிக்கா : 44 இடம்
சீனா: 176 இடம்
ரஷ்யா – 148 இடம்
பூட்டான்: 94 இடம்
பாகிஸ்தான்: 147 இடம்
நேபாளம்: 105 இடம்
வங்காளதேசம்: 144 இடம்
ஆப்கானிஸ்தான்: 120 இடம்

இந்த கருத்துக்கணிப்பில் கடைசி இடமான அதாது 180வது இடத்தில் எரிட்ரியா என்ற நாடும், 179வது இடத்தில் வடகொரியாவும், சிரியாவிற்கு 177வது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply