13-வது உலக தமிழ் இணைய மாநாடு. புதுச்சேரியில் 19 ஆம் தேதி ஆரம்பம்.

internet conference
செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 13-வது உலக தமிழ் இணைய மாநாடு புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மும்முரமாக செய்து வருகின்றது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிஞர்கள்  இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்ந மாநாட்டில், ஆய்வரங்கம், கண்காட்சி, மக்கள் அரங்கம் என்று மூன்று பிரிவுகளாக மூன்று நாட்களில் நடைபெற உள்ளது.

ஜெர்மன், பிரெஞ்ச், டச்சு ஆகிய பல்வேறு மொழிகளில் இருந்து தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும், சாப்ட்வேரை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம் என மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து சுமார் 50 கம்ப்யூட்டர் அறிஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply