கோவையில் நேற்று உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. 3 நாட்கள் நடக்க உள்ள இந்த கருத்தரங்கத்தில் உலகின் 15 நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
நேற்று கோவை என்.ஜி.பி கல்லூரியில் உலகத்தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி வி.ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது ” தமிழர்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால்தான் உலகத்தின் பார்வை தமிழ் மொழி மேல் திரும்பும்’ என்று கூறினார்.
இந்த கருத்தரங்கத்தின் முதல் நாளான நேற்று ‘தாயகம் கடந்த தமிழ்’ என்று நூல் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கத்தை பிரபல பத்திரிகையாளர் மாலன் அவர்கள் அமைப்பாளராக இருந்து வருகிறார். கூட்டத்தில் பேசிய மாலன், ‘ தமிழன் அரசனாக இருந்தாலும், அகதியாக இருந்தாலும், தமிழை வளர்ப்பதில் தமிழன் பெரும் உற்சாகம் காட்டுவான்’ இதுபோன்ற கருத்தரங்குகள் அடிக்கடி அமைத்து தமிழ் மொழியின் வளர்ச்சியை உலகம் அறியச்செய்ய வேண்டும்’ என்று பேசினார்.