கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுர கட்டிடங்கள் அல்கொய்தா தீவிரவாதிகளால் விமானங்கள் மோதி தகர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க அரசு பின்லேடனை வேட்டையாடி சுட்டு கொன்று, பிணத்தை கடலில் தூக்கி எறிந்தது.
இந்நிலையில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையங்கள் கட்டிடங்களை மீண்டும் எழுப்பும் முயற்சியில் அமெரிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டது. இந்த கட்டிடங்கள் கட்டும் பணி நிறைவடைந்து திறப்பதற்கு தயாராக இருக்கின்றது.
104 மாடி கட்டிடங்களாக உருவாகியிருக்கும் இந்த பிரமாண்ட கட்டிடங்களை கட்டி முடிக்க $3.9 பில்லியன் செலவாகியுள்ளது. இந்த கட்டிடங்கள்தான் தற்போது அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடங்கள் என்ற பெருமையை பெருகின்றது.
இந்த கட்டிடங்களின் திறப்புவிழா தேதியினை விரைவில் முடிவு செய்து அறிவிக்க இருப்பதாக நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்