உலக அளவில் பல்கலைக்கழகங்களின் தரப்பட்டியல். முதல் 200 இடங்களில் இந்தியா இல்லை.

universityஉலக அளவில் பல்கலைக்கழகங்களின் தரப்பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள்  இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

உலகெங்கும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700 பல்கலைக்கழகங்களின் தரப்பட்டியல் ஒன்று நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளியிட்டப்பட்டது. இந்த பட்டியலில் அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு, கால்டெக், பிரின்சிடென், யேல் பல்கலைக்கழகங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்அமெரிக்காவின் 51 கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தின் 29 நிறுவனங்கள், ஜெர்மனியின் 13 நிறுவனங்கள், நெதர்லாந்தின் 11 நிறுவனங்கள், கனடாவின் 10 நிறுவனங்கள், ஜப்பானின் 10 நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் 8 கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த பட்டியலின் முதல் 200 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளன.

ஆனால் இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு கல்வி நிறுவனமும் முதல் 200வது இடங்களுக்குள் இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. மும்பை ஐ.ஐ.டி. 222வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி. 235 இடத்தையும், கான்பூர் ஐ.ஐ.டி. 300வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 322வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், டெல்லி பல்கலைக்கழகம், ரூர்சி ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவை 400வது இடத்திற்கு கீழ் வந்துள்ளன.

Leave a Reply