உலகின் அதிக மாசு உள்ள நகரங்கள் எவை எவை தெரியுமா?

உலகின் அதிக மாசு உள்ள நகரங்கள் எவை எவை தெரியுமா?

உலகம் முழுவதும் மாசு நிறைந்து சுகாதாரம் குறைந்து வருவதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் அறிவித்து கொண்டிருக்கும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் உலகில் அதிக மாசு உள்ள நகரங்கள் குறித்து ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் உலகில் அதிக மாசு நிறைந்த முதல் ஐந்து நகரங்களில் நான்கு நகரங்கள் இந்தியாவை சேர்ந்த நகரங்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு உலகின் அதிக மாசு நிறைந்த நகரமாக டெல்லி இருந்த நிலையில் இந்த ஆண்டின் உலகின் மிக மாசு நிறைந்த நகரமாக ஈரான் நாட்டின் சாபோல் என்ற நகரம் உள்ளது. ஆனாலும் 2 முதல் 5 வது இடங்களை இந்தியாவின் குவாலியர், அலகாபாத், பாட்னா மற்றும் ராஜ்பூர் ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.

மேலும் உலகின் 20 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் 10 இடங்கள் இந்திய நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. 2014 ஆம் ஆண்டில் 13 இந்திய நகரங்கள் இடம் நினைவு கூறத்தக்கது. காற்றில் உள்ள நுண் துகள்களை குறிப்பிடும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி 122 என்ற அளவுக்கு இருப்பதால், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9-வது இடத்தில் உள்ளது. கோடைக்காலத்தில் புழுதி புயலால் பாதிக்கப்பட்ட ஈரானின் சாபோல் நகரம் அதிக அளவு பிஎம்.2.5 அளவீடு 217 என்ற அளவுக்கு உள்ளதால், அதிக மாசு நிறைந்த நகரமாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக மாசு உள்ள இருபது நகரங்களில் விபரங்கள் பின்வருமாறு:pollution

 

Leave a Reply