ஒரே இரவில் ரூ.40 ஆயிரம் கோடியை இழந்த பிரபல தொழிலதிபர்.

ஒரே இரவில் ரூ.40 ஆயிரம் கோடியை இழந்த பிரபல தொழிலதிபர்.

richestஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் எடுத்த முடிவால் பிரிட்டன் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் படுமோசமாக வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் பெரும் முதலீட்டை இழந்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள கோடீசுவரர்கள் தங்களது வருவாயில் 3.2 சதவீதம் லாபத்தை இழந்துள்ளதாகவும் குறிப்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கோடீசுவரர் அமான்சியோ ஆர்டெகா என்ற தொழிலதிபர் சுமார் ரூ.40 ஆயிரம் கோடியை ஒரே இரவில் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவரை தவிர மேலும் பில்கேட்ஸ், ஜெப் பெஷோஸ், ஜெரால்டு கவென்திஸ், குரோஸ்வெனர் உள்பட 9 கோடீசுவரர்கள் தலா ரூ.7 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர். இந்தியாவிலும் பல கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பங்குச்சந்தை சரிவால் பலகோடி ரூபாய் குறைந்துள்ளது.

Leave a Reply