மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை முதலிடத்தை பெற்ற நாடு எது தெரியுமா?
உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ தகுந்த நாடு எது என்பது குறித்த பட்டியல் ஒன்றை ஐ.நா-வின் Sustainable Development Solutions Network என்ற அமைப்பு கடந்த சில நாட்களாக எடுத்து வந்தது. தற்போது இந்த அமைப்பு இதன் முடிவை வெளியிட்டுள்ளது
இதன்படி உலகிலேயே மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்கும் தகுதி பெற்ற நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நார்வேவை அடுத்து டென்கார்க் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மேலும் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இந்தியா 122வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 118வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 4 இடங்கள் இறங்கியுள்ளது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்தான். மேலும் உலகில் மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடு என்ற வகையில் இந்த பட்டியலில் கடைசி நான்கு இடங்களை புருண்டி, தன்சானியா, சிரியா, ரவாண்டா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.