உலகின் முதல் பைலட் சகோதரிகள். மலாலா கனவு நனவாகிறது
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சகோதரிகள் உலகின் முதல் பைலட் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். மர்யம் மசூத் (Maryum Masood), எர்யம் மசூத் (Erym Masood) என்ற சகோதரிகள். பாகிஸ்தான் அரசின் சர்வதேச விமான சேவையில் பைலட்டாகப் பணிபுரிகின்றனர். அக்கா, தங்கை . இருவருக்கும் சமீபத்தில்தான் ‘போயிங் (Boeing) 777’ என்ற ஸ்பைக் ஜெட்டுக்கு இருவரும் ஒருசேர பைலட் வாய்ப்பு கிடைத்தது.
பாகிஸ்தான் விமான சேவையின் ஆய்வாளர் கிலானி, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பெருமையுடன் பகிர, உலகம் தற்போது இந்த சகோதரிகள் புகழ் பெற்று வருகின்றனர். சீனியரான அக்கா மர்யமிடம் ஸ்பைஸ் ஜெட் இயக்குவதற்கான பைலட் உரிமம் வெகுநாட்களாகவே இருக்கிறது. சமீபத்தில் பயிற்சி முடித்து பைலட் உரிமம் பெற்ற தங்கை எர்யம், தன் அக்காவுடன் இணைந்து ஒரே விமானத்தில் பைலட் ஆகும் வாய்ப்பு தனக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
பொதுவாக, 6, 12 மணி நேரப் பயணங்கள் கொண்ட விமானங்களில் ஒரு கேப்டன், ஒரு ஃபர்ஸ்ட் ஆபீஸர் என இரண்டு பைலட்கள் இருப்பார்கள். முதல் பாதி நேரத்துக்கு கேப்டனும், மறு பாதி நேரத்துக்கு ஃபர்ஸ்ட் ஆபீஸரும் விமானத்தை இயக்குவார்கள். அப்படித்தான் ‘போயிங் 777’ ஸ்பைஸ் ஜெட்டில் அக்கா மர்யம் கேப்டனாகவும், தங்கை எர்யம் ஃபர்ஸ்ட் ஆபீஸாராகவும் வாய்ப்புப் பெற்று, ‘உலகின் முதல் பைலட் சகோதரிகள்’ என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
போயிங் 777 மினி ஸ்பைஸ் ஜெட், 450 பயணிகள் வரை பயணம் செய்யக்கூடியது. முழுக்க ‘கேட் டிசைன்’ என்று கூறப்படும் கம்ப்யூட்டர் டிசைன்களால் உருவாக்கப்பட்டது. இதை இயக்க, இந்த டிசைன் பற்றிய தெளிவான புரிதலும் தன்னம்பிக்கையும் சற்றே கூடுதலாகத் தேவை. மர்யம், இர்யம் இருவரும் பாகிஸ்தான் விமானச் சேவையில் பணிபுரிந்தாலும், ஒரே விமானத்தின் காக்பிட்டை(பைலட்களுக்கான இடம்) சக அலுவலர்களாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை அவர்களுக்குத் தந்தது, ‘போயிங் 777’. லாகூர் முதல் கராச்சி வரை, நியூயார்க், லண்டன் என இந்த ஜெட்டில் பறந்துகொண்டிருக்கிறது இந்த ‘மாற்றான்’ கூட்டணி. பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவின் கனவு தற்போதுதான் நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது.