உலகின் மகிழ்ச்சிகரமான நாடு எது? கருத்துக்கணிப்பு முடிவுகள்

உலகின் மகிழ்ச்சிகரமான நாடு எது? கருத்துக்கணிப்பு முடிவுகள்
happy country
ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ என்ற அமைப்பு உலகிலேயே மகிழ்ச்சியாக வாழ உகந்த நாடு எது என்பது குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை கடந்த சில மாதங்களாக எடுத்து வந்தது. மொத்தம் 158 நாடுகளை கணக்கில் எடுத்து கொண்டு எடுத்து வந்த இந்த கருத்துக்கணிப்பு தற்போது முடிவடைந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நாடு என்ற பெருமையை டென்மார்க் நாடு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்திருந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 118வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தியாவை விட வன்முறை அதிகமாக நிகழும் பாகிஸ்தான், வங்கதேசம், உக்ரைன், பாலஸ்தீனம், ஈராக் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னணி இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மகிழ்ச்சியே இல்லாத நாடுகள் என டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளதாக இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சிகரமான முதல் பத்து நாடுகள் எவை என்பதை தற்போது பார்ப்போம்.

1. டென்மார்க்
2. சுவிட்சர்லாந்து
3. ஐஸ்லாந்து
4. நார்வே
5. பின்லாந்து
6. கனடா
7. நெதர்லாந்து
8. நியூசிலாந்து
9. ஆஸ்திரேலியா
10. ஸ்வீடன்

Leave a Reply