சீனாவில் ரூ.2080 கோடியில் உலகின் மிகப்பெரிய தீம் பார்க்
[carousel ids=”67527,67528,67529,67530,67531,67532,67533,67534,67535″]
உலகின் மிகப்பெரிய தீம் பார்க் சீனாவில் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்த தீம் பார்க்கிற்கு சீனாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சீனாவில் உள்ள ஜியேஜிங் மாகாணத்தில் 9.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீம் பார்க், இந்திய மதிப்பில் சுமார் 2080 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஹலோ கிட்டி’ என்ற பெயரில் ஆரம்பிக்கபட்டுள்ள இந்த தீம் பார்க்கின் பிரமாண்டத்தை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜப்பான் நிறுவனமான ‘சாண்ட்ரியோ’ என்ற நிறுவனம் இந்த தீம் பார்க்கை அமைத்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் கடந்த 1974ஆம் ஆண்டு முதல் தீம் பார்க் ஒன்றை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.ல்