உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை வடிவமைத்து வரும் சீனா
[carousel ids=”76843,76844,76845,76846,76847,76848″]
உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் ஒன்றை சீனா வடிவமைத்து வருவதாகவும், இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த டெலஸ்கோப் 500 மீட்டர் விட்டத்தில் உள்ளதாகவும், இதை வடிவமைக்க சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு ஆனதாகவும் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த டெலஸ்கோப்பின் மதிப்பு ரூ.1260 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு சீனாவில் உள்ள Guizhou Province என்ற பகுதியில் இந்த டெலஸ்கோப்பை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி வரும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த டெலஸ்கோப்பை நடந்து சுற்றி வர நாற்பது நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: China begins testing World`s largest radio telescope as construction of $190 Million project enters final stage