பீச் அருகே இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தில் அமைந்த அமைதியான நூலகம்.

Daft Planners Build Library On A Beach

நூலகங்களுக்கு வந்து புத்தகங்களை படிப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான தேவை அமைதியான சூழ்நிலைதான். ஆனால் தற்போதைய நிலையில் பல நூலகங்கள் நெருக்கடியான இடங்களில் அமைந்துள்ளதால் அமைதி கிடைப்பதில்லை.

இந்நிலையில் சீனாவில் கடற்கரை அருகே யாரும் தொந்தரவு செய்ய முடியாத இடத்தில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை அழகை ரசித்து கொண்டே இந்த நூலகத்தில் புத்தகங்களை படிக்கலாம். இந்த நூலகத்தின் அருகே கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வேறு எந்த கட்டிடங்களும் கிடையாது. இந்த நூலகம் கடற்கரை மணலில் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை வசதியும் கிடையாது. நடந்து சென்றுதான் இந்த நூலகத்தை அடைய முடியும்.

சீனாவில் உள்ள கின்ஹாங்டோ என்ற நகரில் அமைந்துள்ள இந்த நூலகத்தின் பெயர் ‘சான்லியான் பொது நூலகம். இந்த நூலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து அமைதியான சூழ்நிலையில் புத்தகங்களை படித்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் இயற்கையான சூரிய வெளிச்சம் நூலகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பது இதன் இன்னொரு சிறப்பு.

இந்த நூலகம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால் உப்புக்காற்றால் நூலகத்தின் சுவர் சேதமடையாத வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Daft Planners Build Library On A Beach Daft Planners Build Library On A Beach Daft Planners Build Library On A Beach Daft Planners Build Library On A Beach Daft Planners Build Library On A Beach

Daft Planners Build Library On A Beach

Leave a Reply