ரஷ்யாவில் அடர்ந்த காடுகள் அடங்கிய ஒரு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை வெறும் கண்ணாடிகளால் கட்டி ரஷ்ய பொறியாளர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள கஜகஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த அல்மாட்டி என்ற காட்டுப்பகுதியில் சுற்றிலும் நாற்பது அடி உயர மரங்களுக்கு இடையில் மூன்று அடுக்கு கண்ணாடி மாளிகை ஒன்று கட்டப்பட்டுள்ளது. சமையலறை, படுக்கையறை, கழிப்பிடம் ஆகிய அனைத்தும் இந்த கட்டிடத்தில் அடங்கியிருந்தாலும் உள்ளே எந்த ஒரு செயலையும் பிரைவசியாக செய்ய முடியாது. வெறும் கண்ணாடிகளால் மட்டுமே ஆனது என்பதால் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே என்ன நடந்தாலும் வெட்டவெளிச்சமாக தெரியும் என்பதுதான் இந்த கட்டிடத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட்.
காட்டுப்பகுதிக்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் இந்த கண்ணாடி மாளிகையை கண்டுகளித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தின் மின்சார வசதி ஜெனரேட்டர் மூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இரவிலும் ஒருசிலர் இந்த மாளிகையில் தங்கிவருவதாக கூறப்படுகிறது.