அடுத்தடுத்த மாதங்களில் மரணம் அடைந்த உலகின் மிக வயதான இரட்டையர்கள்.

[carousel ids=”64567,64568,64570″]

உலகின் மிக வயதான இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்ற இரண்டு பெண்மணிகள் அடுத்தடுத்த மாதங்களில் மரணம் அடைந்தனர். ஒரே நேரத்தில் பிறந்த இந்த இரட்டையர்கள் சாவிலும் இணைபிரியாது அடுத்தடுத்து மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1911ஆம் ஆண்டு பிறந்த 103 வயதான புரோரன்ஸ் டேவிஸ் மற்றும் கிளெனிஸ் தாமஸ் என்ற இரட்டையர்கள் இரண்டு உலகப்போரையும் கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பிறந்த அடுத்த வருடம்தான் டைட்டானிக் கப்பல் மூழ்கியது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத் வேல்ஸ் கேயர்பில்லி என்ற பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இந்த இரட்டையர்கள் அந்த கிராமத்தை விட்டு வேறெங்கும் சென்றதில்லையாம். அடுத்தடுத்த அறைகளில் வசித்து வந்த இருவரும் தங்களை எளிதில் பார்த்துக்கொள்வதற்காக அவர்களுடைய வீட்டில் சமையல் அறையை இணைத்தே கட்டியுள்ளனர்.

ஐந்து குழந்தைகள், 12 பேரக்குழந்தைகள் மற்றும் 19 கொள்ளுப்பேரன்களை கொண்ட இந்த இரட்டையர்களில் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி இறந்தார். இவரை அடுத்து புரோரன்ஸ் டேவிஸ் மே 20-ந்தேதி இறந்தார்.

வாழ்நாள் முழுவதும் இருவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த இரட்டையர்கள் வெளிநாடு சென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்நாள் முழுவதும் இணைந்து சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.  இருவரும் திருமணத்திற்கு முன்னர் துப்புரவுத் தொழில் செய்து வந்ததாகவும், கணவர்கள் இறக்கும் வரை அவர்களுடன் இணைந்தே இருந்ததாகவும், கணவர்கள் இறந்த பின்னர் இவர்கள் இருவரும் மறுமணம் முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply