உலகிலேயே மிக வயதான நபர் என்ற பெருமையை அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஒரு பெண் பெற்றுள்ளார்.
இவருக்கு வயது தற்போது 116. கடந்த ஜூன் மாதம் தனது 116வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடிய இவருடைய பெயர் சுசன்னா மஸ்கட் ஜோன்ஸ் என்பது ஆகும்.
உலகின் மிக வயதான மனிதர் என்ற பட்டத்தை பெற்றிருந்த ஜெராலியன் லடபி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணம் அடைந்ததை அடுத்து தற்போது சுசன்னா இந்த பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1899ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்த இவருக்கு உடன்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் என மொத்தம் என 100 பேர் உள்ளனர்.
நீண்ட நாட்கள் வாழ்வதின் ரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் இவரிடம் கேட்டபோது நன்றாக தூங்குவதே தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறியுள்ளார்.
சில வருடங்கள் வரை கண் நன்றாக தெரிந்த இவருக்கு தற்போது கண்பார்வை கிடையாது. எனினும் காது நன்றாக கேட்கிறது.
இந்நிலையில் உலகிலேயே மிக வயதான ஆண் என்ற சாதனையை பெற்றிருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 112 வயது சகாரி மொமோய் என்பவர் நேற்று முன் தினம் காலமானார்.