உலகின் மிக வயதான லண்டன் மனிதர் 110வது வயதில் மரணம்.

உலகின் மிக அதிக வயதான மனிதராக வாழ்ந்து வந்த லண்டனை சேர்ந்த ஹெர்ஸ் சோபர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு லண்டன் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்ட ஹெர்ஸ் சோபர், அந்த போரின்போது மிக ஆபத்தான நிலையில் உயிர்விடும் நிலையில் இருந்து தப்பித்துள்ளார். இவர் ஒரு சிறந்த இசை மேதை ஆவார். இவரை பற்றி எடுக்கப்பட்ட ஒரு டாகுமெண்டரி படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

110 வயதான ஹெர்ஸ் சோபர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

1903ஆம் ஆண்டு பராகுவே நாட்டில் பிறந்த இவர், பின்னாளீல் லண்டனில் குடிபெயர்ந்தார். மியுசிக் சேவ் மை லைப் என்ற டாகுமண்டரி படத்தில் இவர் நடித்துள்ளார். இவருடைய பேரன் ஏரியல் சோமர் அவரது மரணம் குறித்து மிகுந்த கவலையடைந்ததாக கூறினார்.

மரணம் அடைந்த ஹெர்ஸ் சோபருக்கு 1931ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 1937ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். அவர் கடந்த 2001ஆம் ஆண்டே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1fmGwzx” standard=”http://www.youtube.com/v/SBxBD3Dszm8?fs=1″ vars=”ytid=SBxBD3Dszm8&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7856″ /]

 

Leave a Reply